சென்னை உள்பட 3 மாவட்டாங்களுக்கு நாளையும் பள்ளிகள் விடுமுறை

புதன், 1 நவம்பர் 2017 (19:08 IST)
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக கடந்த நான்கு நாட்களாக மழை கொட்டோ கொட்டு என்று கொட்டி கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.



 
 
இந்த நிலையில் வரும் நவம்பர் 2ஆம் தேதி வரை கனமழையும், நவம்பர் 5ஆம் தேதி மிதமான மழையும் இருக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதை அடுத்து நாளையும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிகளுக்கு ஏற்கனவே தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை அறிவித்த நிலையில் 3வது நாளான நாளையும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதே நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்