கருணாநிதி இல்லத்தில் புகுந்த மழை நீர்: அமைச்சர் சொல்வது என்ன?

வெள்ளி, 3 நவம்பர் 2017 (07:15 IST)
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு கனமழையை ஞாபகப்படுத்தும் வகையில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பாரபட்சமில்லாமல் மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.


 


சென்னை வெள்ளம் தலைவர்களின் இல்லங்களையும் விட்டுவைக்கவில்லை. நேற்றிரவு திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் வெள்ளம் புகுந்தது. இருப்பினும் கருணாநிதி உள்பட அவரது குடும்பத்தினர் பாதுகாப்புடன் உள்ளனர்.

இந்த நிலையில் கருணாநிதியின் வீட்டில் வெள்ளம் புகுந்த தகவல் கிடைத்தவுடன் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சென்று எடுத்த நடவடிக்கை காரணமாக அவரது வீட்டில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுவிட்டது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்