தேமுதிக இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் ஸ்டாலின் பொட்டு வைத்தது குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி தேமுதிக சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
நோன்பு நிகழ்ச்சியின் போது பிரேமலதா விஜயகாந்த் பின்வருமாறு பேசினார். விஜயகாந்த் எம்.ஜி.ஆர்-ஐ ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டார். எங்கள் கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலை வைக்க அதுதான் காரணம். இதனாலேயே விஜயகாந்த் கருப்பு எம்.ஜி.ஆர் என அழைக்கப்படுகிறார்.
இங்கு எல்லா மதமும் ஒன்றுதான். இறைவன் ஒன்றாகதான் நம்மை படைத்தான். ஆனால், கோடுகள் போட்டு நாம் பிரித்துக்கொண்டோம். நாங்கள் கடவுள் இருப்பதாக நம்புகிறோம்.
ஆனால், சிலர் இங்கே பொட்டு வைத்தால் அழித்துவிட்டு, வெளியூர் சென்று வைத்துக்கொள்கிறார்கள். திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவார்கள் என திமுக ஸ்டாலினை விமர்சித்து பேசினார்.