உல்லாசம் அனுபவித்து விட்டு காதலியை கொன்ற காதலன் : பதறவைக்கும் ரிப்போர்ட்

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2018 (19:07 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை அருகே உள்ள மீனச்சல் கிராமத்தில் வசித்து வந்தவர் ஸ்ரீஜா ( 23 )நர்சிங் படித்துள்ளார். எனவே தேங்காய் பட்டிணத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த 19 ஆம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற ஸ்ரீரா திரும்ப வீடுக்கு வரவில்லை. 
இதனையடுத்து அடுத்த இரண்டு நாள் கழித்து( 21) ஸ்ரீஜாவின் உடல் குழித்துறை ஆற்றில் மிதந்துள்ளது.  உடனே அப்பகுதி மக்கள் போலீஸுக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பின் இந்தக் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடத்ஹி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீஜாவின் பிரேத பரிசோதனை முடிவுகளும் வந்தது. அதில் ஸ்ரீஜா 5 மாத கர்பிணியாக இருப்பது தெரியவந்தது.
 
திருமணத்திற் முன்பே ஸ்ரீஜா கர்ப்மாக இருந்ததால் போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது.  அதன் போலீஸார் பிபின் என்பவனை பிடித்து விசாரித்தனர்.
 
அவன் கூறியதாவது:
 
’ஸ்ரீஜாவை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறினேன். அதனால் தனிமையில் அடிக்கடி சந்தித்துக்கொண்டோம். உல்லாசம் அனுபவித்தோம். அதன் பின் ஸ்ரீஜா கர்பமானதால் இருப்பது தெரிந்தது.
 
மருத்துவமனைக்கு சென்று கர்பத்தை கலைத்து விடும்படி அவரை வற்புறுத்தினேன்.அதற்கு அவர் சம்பதிக்கவில்லை. அதனால் பலமுறை எங்களுக்குள் சண்டை வந்தது. பின் ஸ்ரீஜாவை குழித்துறை ஆற்றுக்கு அழைத்து சென்று அவரை ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தேன்.' இவ்வாறு கூறியுள்ளார்.
 
போலீஸார் பிபின் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். மேற்கொண்டு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்