அசோக் குமார் தற்கொலை சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அசோக் குமார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு மதுரையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கந்துவட்டி கொடுமையால் அசோக் சமீபத்தில் இறந்ததற்கு பலரும் தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர்.