அதிமுகவில் பொன்னையனுக்கு சிறப்பு பதவி: அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்!

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (07:52 IST)
அதிமுகவின் அமைப்பு செயலாளர் பணியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட பொன்னையன், அவர்களுக்கு  புதிய பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டு வரும் நிலையில் பொன்னையன், சில சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆடியோவும் இணையதளங்களில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் பொன்னையன்,தான் அவ்வாறு கூறவில்லை என்றும் தனது குரல் போல் யாரோ பேசி இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து திடீரென்று பொன்னையன், நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் தற்போது அவருக்கு அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் என்ற பதவியை அதிமுக நிர்வாகம் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்