பொங்கல் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்ப்பு

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2017 (15:14 IST)
தசரா விடுமுறைக்கு பதிலாக கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்க்கப்பட்டது.


 

 
பொங்கல் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக நேற்று செய்தி பரவியது. பொங்கல் கடந்த சில வருடங்களாக விருப்ப விடுமுறை பட்டியலில் தான் உள்ளது என்று சில அரசியல் தலைவர் தெரிவித்தனர். இதனிடையே தமிழக மத்திய ஊழியர்கள் சங்கம் சார்ப்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 
சமூக வலைதளங்களில் அனைவரும் மத்திய அரசே எதிராக தங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்காக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் சமாளித்து திராவிட கட்சிகளையும், காங்கிரஸ் கட்சியையும் குறை கூறினர்.
 
இந்நிலையில் தற்போது பொங்கல் கட்டாய விடுமுறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தசரா பண்டிகைக்கு பதில் பொங்கல் திருநாள் சேர்க்கப்பட்டுள்ளது. இனி அனைவரும் தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்ய தொடங்குவார்கள் என்பது குறிபிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்