சென்னை பாண்டிபஜாரில் கடைகள் திடீர் அகற்றம்: பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (20:40 IST)
சென்னை பாண்டி பஜாரில் உள்ள நடைபாதை கடைகள் திடீரென மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சென்னையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தின் கீழ் 48 கோடி ரூபாய் செலவில் பாண்டி பஜார் பகுதியில் அமைக்கப்பட்ட நடைபாதை வளாகம் பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. தற்போது பாண்டி பஜாரின் ஒரு பகுதி ஒருவழிச்சாலையாகவும் மாற்றப்பட்டதால் போக்குவரத்து நெருக்கடியும் இல்லை
 
இந்த நிலையில் ஸ்மார்ட்சிட்டி அழகை கெடுக்கும் வகையில் மெல்ல மெல்ல நடைபாதையில் சிறு, குறு கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு மட்டுமின்றி அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அகற்றினர். இதேபோல் நடைபாதையில் மீண்டும் கடைகள் முளைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்