நாளாக நாளாக அரசுகளின் கடன் சுமை அதிகரித்தபடி உள்ளது. வெவ்வேறு பொருட்களின் மீது வரியை ஏற்றியும் கட்டுபடியாகவில்லை. அதனால் மதுபானங்களின் விலையை உயர்த்தி விடலாம் என முடிவெடுத்துள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
புதுச்சேரி அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட 60 சதவீதம் குறைவான விலைக்கே மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதால் விலையேற்றம் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறியுள்ளனர்.
புதுச்சேரியில் மது விலை குறைவு என்பதால் தமிழகத்திலிருந்து பல மதுப்பிரியர்கள் அங்கே படையெடுப்பது வழக்கம். தற்போது விலையேற்றம் என்றாலும் அது தமிழகத்தை விட குறைவாகவே இருக்கும் என்பதால் மதுப்பிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.