முதல்வர் ஸ்டாலின், தனது அமைச்சரவையைப் நினைத்து வெட்கப்பட வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Siva
செவ்வாய், 26 மார்ச் 2024 (07:28 IST)
முதல்வர் ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தபோது தமிழக ஆளுநர் ரவி வெட்கமே இல்லாமல் சூடு சொரணை இல்லாமல் இன்னும் பதவியில் உட்கார்ந்து இருக்கிறார் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மூக்கறு மட்டும் இன்னும் எப்படி அவரால் பதவி தொடர முடிகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் ஸ்டாலின் கேவலமான ஒருவரை அமைச்சராக வைத்திருப்பதற்கு அவர்தான் தனது அமைச்சரவை குறித்து வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் எந்த ஒரு அமைச்சராவது தங்கள் மாவட்டத்திற்கு வரும் திட்டத்தை வேண்டாம் என்று கூறி வழக்கு போடுவார்களா? ஆனால் அமைச்சர் மனோ தங்கராஜ் 4 வழி சாலை வேண்டாம் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கனிமொழி முன்னிலையிலே பிரதமரை மிக மோசமான கொச்சையான வார்த்தைகளில் பேசியிருந்தார். இப்படி ஒரு கேவலமான அமைச்சரை வைத்திருக்கும் முதல்வர்தான் வெட்கப்பட வேண்டும்’ என்று கூறினார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்