10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்! 9.10 லட்சம் பேர் எழுதுகின்றனர்..!

Siva
செவ்வாய், 26 மார்ச் 2024 (07:20 IST)
தமிழகத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் மாணவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக மற்றும் புதுவையில் சமீபத்தில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது என்பது இதையடுத்து இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆயிரத்து 616 பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதில் தனித் தேர்வர்கள் 28 ஆயிரம் பேரும், 235 சிறைக் கைதிகளும் அடங்குவர் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

இன்று தொடங்கும் 10ம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பதும் பொது தேர்வு அறை கண்காணிப்பு பணியில் 48,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

மேலும் தேர்வு மையங்களில் முறைகேடு செய்யும் மாணவர்களையும் பிடிப்பதற்காக 4 ஆயிரத்து 591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்