வார இதழ் ஒன்றில் தொடர் எழுதி வரும் நடிகர் கமல்ஹாசன், கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தெரியாமல் ஆதரவு தெரிவித்துவிட்டேன், அதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என்று எழுதியிருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கமல்ஹாசனின் மன்னிப்பு குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'கமல் இன்று கூறிய கருத்துக்கு நாளை மன்னிப்பு கேட்பார் என தெரிவித்தார். தற்போது மன்னிப்பு கேட்டது தவறு என்று மீண்டும் ஒருமுறை அவர் மன்னிப்பு கேட்பார் என்று அவர் கூறியுள்ளார்.