அதற்கு பதிலளித்த அவர் “எனக்கு தனிப்பட்டமுறையில் ரஜினியை தெரியாது. ஆனால், ஒரு ரசிகையாக அவரை பிடிக்கும். ஆனால், பிக்பாஸ் மூலம் கமலை தனிப்பட்ட முறையில் தெரியும். அரசியல் என்பது தொழில் அல்ல. அது ஒரு சேவை. சிலர் பணம், புகழுக்காக அரசியலுக்கு வருகிறார்கள். ஆனால், கமல்ஹாசனிடம் அனைத்தும் இருக்கிறது. எனவே, அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லது செய்வார். அப்படி அவர் அரசியலுக்கு வந்தால் அவரை நான் ஆதரிப்பேன்” என ஓவியா தெரிவித்தார்.