நிலவேம்பு குடிநீரை கொடுக்க வேண்டாம்: ரசிகர்களுக்கு கமல் கோரிக்கை

வியாழன், 19 அக்டோபர் 2017 (08:13 IST)
டெங்கு காய்ச்சலை தடுக்கவும், குணப்படுத்தவும் தமிழக அரசு உள்பட சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பலர் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை விநியோகம் செய்து வரும் நிலையில் நிலவேம்பு குடிநீரை தனது ரசிகர்கள் விநியோகிக்க வேண்டாம் என்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். 



 
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்
 
ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்
 
என்றும் அவர் இரண்டு டுவிட்டுக்களில் கூறியுள்ளார்.
 
கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்