ஸ்டாலின் உடலில் முகமது அலி ஜின்னா ஆவி: பொன் ராதாகிருஷ்ணன் திடுக்கிடும் தகவல்

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (07:31 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறும் கருத்துக்களைக் கூறி வருவதாக பாஜகவினர் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவில் ஒரு கட்சியை நடத்திக் கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக திமுக தலைவர் பேசி வருவதாகவும் அவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
குறிப்பாக காஷ்மீரின் 370 ஆவது பிரிவு நீக்கப்பட்டபோது இந்தியாவிலுள்ள பல எதிர்க்கட்சிகள் அதை ஏற்றுக்கொண்ட நிலையில் திமுக மட்டுமே தீவிரமாக எதிர்த்தது என்றும் இந்த சட்டத்தை இம்ரான்கான் மற்றும் முக ஸ்டாலின் ஆகிய இருவர் மட்டுமே கண்டித்தனர் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர் 
 
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த பாஜக பிரமுகர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தரிசனத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த போது ’முக ஸ்டாலின் உடலில் முகமது அலி ஜின்னா ஆவி புகுந்து விட்டதாகவும் அதனால்தான் அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் கூறினார் 
 
மேலும் குடியுரிமை சீர்திருத்த சேர்ந்த சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்றும் இந்த சட்டத்தை வைத்து பொய் பிரச்சாரம் செய்து வரும் தேர்தலில் வெற்றி பெறலாம் என திமுக சதி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொன்னாரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்