மணிகண்டன் என்கவுண்டரை அடுத்து மேலும் ஒரு ரவுடி மீது துப்பாக்கி சூடு!

புதன், 25 செப்டம்பர் 2019 (21:15 IST)
விழுப்புரம் ரவுடி மணிகண்டன் நேற்று சென்னையில் என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரவுடி மாணிக்கராஜ் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ரவுடி மாணிக்கராஜ் காலில் குண்டு பட்டதால் அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தற்போது ரவுடி மாணிக்கராஜ் காலில் குண்டடிப்பட்டு காயங்களுடன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவுடி மாணிக்கராஜ் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ‘தனது கண்களை கட்டி வேண்டுமென்றே பிடித்து வைத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கனவே விழுப்புரம் ரவுடி மணிகண்டன் என்கவுண்டர் குறித்து மனித உரிமை ஆணையம் காவல்துறையில் விளக்கம் கேட்டுள்ள நிலையில் ரவுடி மாணிக்கராஜின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
அடுத்தடுத்து இரண்டு ரவுடிகள் போலீசார்களின் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள மற்ற ரவுடிகள் அதிர்ச்சியில் இருப்பதாகவும், அடுத்து எந்த ரவுடி மீது என்கவுண்டர் நடக்கும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் குற்றங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்