பொட்ட மாதிரி ஓடி ஒளியுறீங்க: ரவுடிகளை தெறிக்கவிடும் கோவில்பட்டி போலீஸ்

சனி, 15 டிசம்பர் 2018 (13:04 IST)
கோவில்பட்டியை சேர்ந்த போலீஸ்காரரான இசக்கிராஜா, வாட்ஸ் ஆப் மூலம், ரவுடிகளை மிரட்டிய நிகழ்வு பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
 
கோவிபட்டியை சேர்ந்த இசக்கிராஜா என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த ஏரியாவில் செம பேமஸ். ரவுடிகளை துவம்சம் செய்வதில் இவருக்கு ஈடு இணை எவரும் இல்லை. யார் என்னவென்றெல்லாம் பார்க்க மாட்டார். எதிலும் அதிரடி தான்.
 
அப்படி சமீபத்தில் ஒரு ரவுடியை கைது செய்த இசக்கி ராஜா, அவனின் செல்போனை ஆராய்ந்து பார்த்ததில், வாட்ஸ் ஆப்பில் ரவுடிகள் சிலர் தனியாக ஒரு குரூப்பை ஆரம்பித்து தங்களின் குற்ற நிகழ்வுகளை அதன் மூலம் பகிர்ந்து வந்தனர்.
இதனைப்பார்த்த இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா, அதே குரூப்பில் ஒரு ஆடியோவை வெளியிட்டார். ரவுடிகள் இதேபோல குரூப்பை ஆரம்பித்து திரிந்தால் ஒருத்தன கூட விடமாட்டேன். அம்புட்டு பேரையும் ரிமாண்டு பண்ணிடுவேன். கொலை பண்ணுனா நீங்க பெரிய ஆளா? பொட்ட மாதிரி ஓடி ஒழியுறீங்கன்னு ஏகபோகமாக பேசுகிறார். இவரின் அதிரடி நடவடிக்கைகளால் கோவில்பட்டி பகுதிகளில் குற்றசம்பவங்கள் குறைந்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்