பைக் வீலிங் செய்து சிக்கிய 13 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து? அதிரடி நடவடிக்கை..!

செவ்வாய், 14 நவம்பர் 2023 (16:25 IST)
திருச்சி மாவட்டத்தில் பைக் வீலிங் செய்து சிக்கிய 13 பேர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி தினத்தில் திருச்சி மாவட்டத்தில் சில இளைஞர்கள் பைக்கில் ராக்கெட் உள்பட பட்டாசுகள் வைத்து வீலிங் செய்த காட்சியின் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது.

இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து 13 பேரை கைது செய்தனர்.  இந்த நிலையில் பைக் வீலிங் செய்து சிக்கிய 13 பேரின் ஓட்டுநர் உரிமையை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து துறைக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பைக் வீலிங் செய்த விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட 13 பேர்கள் ஓட்டுநர் உரிமையையும் ரத்து செய்ய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை இது போன்று மேலும் ஒரு சம்பவம் நடக்காமல் இருப்பதற்கான எச்சரிக்கை என்றும் கூறப்பட்டு வருகிறது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்