கோபேக் மோடி பயம் ? – மோடியால் மதுரைக்கு பலத்த பாதுகாப்பு …

Webdunia
சனி, 26 ஜனவரி 2019 (12:44 IST)
நாளை (ஜனவரி 27 ), பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரை வர இருக்கிறார். அதனால் பாதுகப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த பட்டுள்ளன.

மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் 1200 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நீண்ட இழுபறிகளுக்குப் பின் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மதுரை மண்டேலா நகரில் நடைபெறுகிறது. இதற்கான சிறப்புத் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்து மதுரைக்கு வருகிறார். iந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கடந்த ஆண்டு மோடி தமிழகம் வந்த போது கருப்புக்கொடி காட்டியும் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக்கை ட்ரண்ட் செய்தும் பெரியாரிய அமைப்பை சேர்ந்தவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். அதுபோல இம்முறையும்  மோடி அரசு கொண்டுள்ள 10 % இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மோடிக்குக் கருப்புக் கொடிக் காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார். மேலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் மோடிக்குக் கருப்புக்கொடி காட்டுவோம் என அறிவித்துள்ளார்.

இதனால் மதுரை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சுமார் 5 ஆயிரம் போலீசார் வரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்