டிஜிபி அலுவகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இரு காவலர்கள் கைது...

Webdunia
வியாழன், 22 மார்ச் 2018 (18:09 IST)
சென்னை டிஜிபி அலுவலகத்தின் வாசலில் தீக்குளிக்க முயன்ற இரு காவலர்கள் இன்று மாலை கைது செய்யப்பட்டனர்.

 
தேனி மாவட்டத்தை சேர்ந்த ரகு, கணேஷ் என்ற ஆயுதப்படை காவலர்கள் எந்தவொரு தவறும் செய்யாமல் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக கூறி நேற்று டிஜிபி அலுவகத்தில் மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் தேனியில் ஆயுதப்படை அதிகாரிகளாக பணிபுரியும் நாங்கள் அங்குள்ள உயரதிகாரிகளால் சாதிரீதியாக ஓதிக்கி வைக்கப்பட்டு, பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளோம் என கூறியிருந்தனர். 
 
அந்நிலையில், திடிரென டிஜிபி அலுவலகம் முன் அந்த இரண்டு காவலர்களும் தீக்குளிக்க முயற்சித்தனர். அப்போது அவர்களை சக காவலர்கள் தடுத்த நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
ஆனால், அந்த காவலர்கள் இருவரும் பணியில் ஒழுங்காக செயல்படவில்லை. உயர் அதிகாரிகளை எப்போதுமே மதிப்பதில்லை. எனவே உயர் அதிகாரிகளின் உத்தரவு படியே அவர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது என போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், காவலர்கள் கணேஷ் மற்றும் ரகு ஆகியோரை மெரினா காவல் நிலைய அதிகாரிகள் இன்று கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்