அனுமதியின்றி போராட்டம் நடத்திய திமுக: ஸ்டாலின் உள்ளிட்ட 3,500 பேர் மீது வழக்கு!

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (09:43 IST)
அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக ஆளுனர் இல்லம் அருகே போராட்டம் நடத்திய திமுகவினர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுனர் ஒப்புதல் அளிக்கப்படாமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுனர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி ஆளுனர் இல்லத்தின் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்