சாத்தான்குளம் வழக்கில் ஜாமீன் கோரிய காவலர்கள்; என்ன நடக்கும்?

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (12:34 IST)
சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். 
 
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஏற்கனவே ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு காவலர்களை என மொத்தம் ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதனைதொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 காவலர்களை மீண்டும் அழைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு இன்று காணொலி மூலம் விசாரிக்கப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்