தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க வேண்டுமென தமிழக முதல்வர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.