வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்த தாய்-மகள் கைது

Webdunia
சனி, 22 டிசம்பர் 2018 (17:16 IST)
சென்னையை சேர்ந்த தாய், மகள் ஆகியோர் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணும், அவரது மகள் மோனிஷாவும் இணைந்து அதே பகுதியில், வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் தனது மகனுக்கு வேலை வேண்டி முத்துராஜ் என்பவர் பதிவு செய்தார். அவரிடம் மகனுக்கு நல்ல வேலை  வாங்கித் தருவதாகக் கூறி ஐந்து லட்சம் ரூபாய் அமுதாவும் மோனிஷாவும் வாங்கியதாக தெரிகிறது.

ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததால் முத்துராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் பெங்களூரில் சொகுசு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த அமுதாவையும், மோனிஷாவையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் முத்துராஜை போல் பலரிடம் வேலை வாங்கி தருவதாக  கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்