இறந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்த போலீஸ்: மபியில் அதிசயம்

வெள்ளி, 21 டிசம்பர் 2018 (15:54 IST)
மத்தியபிரதேசத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணிற்கு பெண் போலீஸ் பிரசவம் பார்த்து குழந்தையை உயிருடன் மீட்டுள்ளார்.
 
மத்தியபிரதேச மாநிலம் கட்னி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் தாகூர். இவரது மனைவி லட்சுமி தாகூர். இவர்களுக்கு 4 பிள்ளைகள் இருந்த நிலையில் லட்சுமி மீண்டும் கர்ப்பமாகி பிரசவத்திற்கு காத்திருந்தார்.
 
இந்நிலையில் நேற்று அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பெண் காவலர் கயிற்றில் தொங்கிய பெண்ணை கீழே இறக்கியபோது அந்த பெண் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ந்தார். குழந்தை பாதி வெளியே வந்ததை பார்த்து, மருத்துவருக்கு உடனடியாக போன் செய்தார். 
 
மருத்துவர்கள் வர நேரமாகும் என்பதால், டாக்டரின் அறிவுறுத்தலின் படி மெதுவாக குழந்தையை வெளியே எடுத்தார். பின்னர் மருத்துவர்கள் வந்து குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டினர். குழந்தை தற்பொழுது நலமாக உள்ளது. இச்சம்பவம் மபியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்