ஜெயலலிதாவின் சிகிச்சையை தள்ளிவைக்க சசிகலா உத்தி- ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (18:14 IST)
ஜெயலலிதாவுக்கு குறித்த நேரத்தில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யாமல்  இருக்க சசிகலாவின் உத்தி கையாளபட்டதாக  ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார்.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது என்பதும், இந்த ஆணையம் ஒரு சில ஆண்டுகளாக விசாரணை செய்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை அறிக்கையில், ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சிவகுமார் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்கிறது என்றும் எனவே அவர்கள் மீது விசாரணைக்கு பரிந்துரைத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  நீதிபதி ஆறுமுகசாமி சமர்பித்துள்ள அறிக்கையில், அப்போது அதிகாரம் உள்ளோருக்கு உதவ வேண்டி அப்பொல்லோ மருத்துவமனை பாபு ஆபிரகாம், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்குவதை தள்ளிப்போடலாம் என இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பீலே கூறியதாக தந்திரம் செய்ததாகவும்,  தவிர்க்க முடியாத அவமானம் என்னவெனில் ஜெயலலிதாவுக்கு குறித்த நேரத்தில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யாமல்  இருக்க சசிகலாவின் உத்தி கையாளபட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்