SSLC ரிசல்ட்டிலும் அறிவியல் முதலிடம்.. தமிழ் கடைசி இடம்! - ஆச்சர்யம் அளிக்கும் செண்டம் பட்டியல்!

Prasanth Karthick

வெள்ளி, 16 மே 2025 (10:29 IST)

இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அறிவியல் பாடங்களில் அதிக மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

 

தமிழக மாநில பாடத்திட்டத்தில் பயின்ற அரசு, அரசு உதவிப்பெறும், தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்த மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ள அதேசமயம், முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

 

இந்த ஆண்டில் அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 10,838 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் அறிவியலில் முழு மதிப்பெண் எடுத்தவர்கள் மொத்தமாக 5,104 பேர்தான். இந்த முறை அறிவியலில் இரண்டு மடங்கு மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

 

அதேபோல கடந்த ஆண்டு சமூக அறிவியலில் 4,428 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 10,256 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதத்தில் 1996 மாணவர்களும், ஆங்கிலத்தில் 346 மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், தாய் மொழியான தமிழில் 8 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

 

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளிலும் அறிவியல் பாடங்களிலேயே மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றிருந்தனர், இதன் மூலம் மாணவர்களிடையே மொழிப்பாடங்களை விட அறிவியல் பாடங்கள் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளதாக கல்வி ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்