காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமூக வலைத்தள தளமான எக்ஸ் பக்கத்தில் ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள "அன்பு மற்றும் பாசப் பிணைப்பை" கொண்டாடி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவில் "ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி அனைத்து நாட்டு மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள அன்பு மற்றும் பாசப் பிணைப்பு தொடர்ந்து ஆழமாகட்டும் என்று நான் நம்புகிறேன்." என்று கூறியுள்ளார்.
அதேபோல் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி வத்ராவும் எக்ஸ் பக்கத்தில் "சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பு, நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் அடையாளமான ரக்ஷா பந்தன் திருநாளில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள். இந்த புனிதமான பண்டிகை அனைவரின் வாழ்விலும் ஏராளமான மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்" என்று கூறியுள்ளார்.