தமிழக முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு: ஏன் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (21:40 IST)
பாரத பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன் தொலைபேசியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேசினார்.

கஜா புயல் சேத விவரங்கள் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம், தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்ததாகவும், புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டதற்காக முதல்வருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் தமிழக முதல்வைரிடம் பேசியதை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், 'புயலால் மரணம் அடைந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்