இதனால், வட தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கடலோர பகுதிகளில் அதி கனமழை பொழியும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதோடு, தென் தமிழகம் மற்றும் கேரளாவில் சில பகுதிகளிலும் கன மழை பெய்யலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். அதோடு, உள் மாவட்டங்களான திருச்சி, அரியலூர், விழுப்புரம், பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்ப்ட்டுள்ளது.