எல்.முருகனுக்கு ஆதரவாக பிரச்சாரம்; தமிழகம் வரும் பிரதமர் மோடி!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (11:29 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றன. இந்நிலையில் பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான எல்.முருகனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த பிரச்சாரத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். அங்கு பிரதமர் மோடி 13 வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்