பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழ்நாடு அரசுதான் காரணம்!? – பிரதமர் மோடி!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (15:09 IST)
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை அதிகரித்ததற்கு அம்மாநில அரசுகள் வாட் வரியை குறைக்காததே காரணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வேகமாக விலை உயர்ந்து வந்தது. தற்போது பல பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100க்கும் அதிகமாக உள்ள நிலையில் பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து இன்று மாநில முதல் அமைச்சர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி “எரிபொருள் மீதான வரியை 2021 நவம்பர் மாதமே மத்திய அரசு குறைத்து விட்டது.  பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்க வேண்டும்.  வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மகாராஷ்டிரா, தெலுங்கானா, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்கள் சில காரணங்களால் மத்திய அரசின் அறிவுறுத்தல்களை கேட்கவில்லை என்றும், வரியை குறைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்