மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கி விழா! அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (20:51 IST)
தமிழகத்தில் 2017–18, 2019–20 கல்வியாண்டிற்கான இலவச மடிக்கணினி  5  லட்சத்து  10  மாணவர்களுக்கு,  ஒரு  கோடியே  62  லட்சத்து 27  கோடி ரூபாய்  மதிப்பில்  வழங்கப்பட உள்ளது என்று கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு.
கரூர்  அடுத்துள்ள  தான்தோன்றிமலை  பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும்  மற்றும்  கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில்  பிளஸ்  டூ  மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு  இலவச  மடிக்கணினி வழங்கி விழா நடைபெற்றது. 
 
விழாவுக்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கலந்து  கொண்டு  மாணவ, மாணவிகளுக்கு  இலவச  மடிக்கணினியை  வழங்கி மாணவர்கள்  மத்தியில்  பேசியதாவது. மாணவர்களின் அறிவாற்றல் வளர்த்துகொள்வதற்காக மறைந்த தமிழக முதல்வர்பல்வேறு தொலைநோக்கு திட்டங்கள் கொண்டு வந்தார். கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 8 ஆயிரத்து 681கோடி 10 லட்சம் ருபாய் மதிப்பில் 46 லட்சத்து 79 ஆயிரம் மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.  
 
மேலும்,. 2019–20 ம் கல்வியாண்டுக்கான 5 லட்சத்து பத்தாரயிரம் மாணவர்கள், கடந்த கல்வியாண்டு நிதிமன்ற வழக்கு தொடர்பாக மடிகணினி வழங்கமுடியாத சூழல் உறுவானது. இரு கல்வியாண்டிற்க்கு சேர்ந்து இந்தாண்டு 5 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்களுக்கு 1,368.27 கோடி ருபாய் மதிப்பில் வழங்கப்படவுள்ளது. தேசிய அளவில் உயர் கல்வி படிப்பின் சதவிகிதம் 25 சதவகிதம், ஆனால் தமிழகத்தில் 46.9 சதவிகிதம்.  கரூர் மாவட்டத்தில் உள்ள இரு அரசு மேல்நிலைப்பளிக்கு 251 மாணவ, மாணவிகளுக்கு 31 லட்சத்து  ருபாய்  மதிப்பில் வழங்கபட்டுள்ளன. அதே போல் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வழி்ப்பு குறித்து பாடபுத்தகத்தில் விரைவில் இடம் பெறவுள்ளது என்று பேசினார். 
 
மேலும், இந்தவிழாவில்  கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூரிய பிரகாஷ்,  கிருஷ்ணராயபுரம்  எம்.எல்.ஏ., கீதா  ஆகியோர் உடனிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்