இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இணைவதை உறுதி செய்யும் வகையில் பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் சற்றுமுன் சென்னை வந்தார். அதிமுக முன்னணி தலைவர்களை சந்தித்து பேசிய பியூஷ் கோயல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'தமிழக மக்கள் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளதாகவும், மக்கள் நலனுக்கு உகந்த கூட்டணி அமைக்கப்படும் என்றும், மத்தியில் அடுத்த அமையும் ஆட்சியில் தமிழகத்தின் குரல் வலுவாக ஒலிக்கும் வகையிலும், தமிழகத்திற்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் தரும் வகையிலும் பா.ஜ.க. நடவடிக்கை எடுக்குமென்றும் கூறினார்.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 8 தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதில் ஆறு தொகுதிகளில் பாஜக போட்டியிட்டு மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் இரண்டு சிறிய கட்சிகள் பாஜக சின்னத்தில் போட்டியிடும் என்றும் கூறப்படுகிறது