கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் பெட்ரோல் – டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் முறை வழக்கத்திற்கு வந்தது.
இந்த தினசரி கட்டணம் நடைமுறைக்கு வந்த போது பெட்ரோல் லிட்டருக்கு 68.02 காசுகள் என்றும், டீசல் விலை 57 ரூபாய் 41 காசுகள் என்றும் இருந்தது. அதன் பின்பு தொடர்ச்சியாக பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தபடியே இருக்கின்றது.
இந்நிலையில் பெட்ரோல் விலை இன்று 10 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் சென்னையில் ரூ.85,58 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அன்றாடம் உயர்ந்து வருகிற இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.