சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (07:49 IST)
சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் 61வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்த போதிலும் கடந்த இரண்டு மாதங்களாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும் 
 
ஆனால் அதே நேரத்தில் மகாராஷ்டிரா உள்பட ஒருசில மாநிலங்களில் சமீபத்தில் பெட்ரோல் டீசலுக்கான வரிகள் குறைக்கப்பட்ட நிலையில் தமிழகத்திலும் பெட்ரோல் டீசலுக்கான வரிகள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்