பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: முடிவே கிடையாதா?

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (06:15 IST)
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களும் பாதித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
 
பெட்ரோல், டீசல் விலை மதிப்பு கூட்டு வரியை குறைக்க முடியாது என ஏற்கனவே தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு என மத்திய அமைச்சரும் தெரிவித்துள்ளார். எனவே இப்போதைக்கு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கும் எண்ணம் மத்திய மாநில அரசுக்கு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
 
இந்த நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து 98.88 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் டீசல் விலை 6 காசுகள் உயர்ந்து 92.89 என்ற விலைக்கு விற்பனை செய்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை இன்னும் ஓரிரு நாட்களில் ரூபாய் 100ஐ தாண்டும் என்ற எதிர்பார்ப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்