நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டு வருவதால் சென்னை, சேலத்தில் பெட்ரோல் விலை 100ஐ நெருங்கியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் தினமும் மாற்றி அமைக்கிறது. இதனால், நாடு முழுவதும் 100க்கும் அதிகமான நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100ஐயும், ஒரு லிட்டர் டீசல் 98ஐயும் எட்டியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.