சென்னையில் கடந்த 72 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாத நிலையில் இன்று 73வது நாட்களாகவும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்ற தகவல் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி பெட்ரோல் டீசலுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி அதிகமாக இருப்பதால் வரியை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது