குஜராத் மாநிலத்தில் 11 குற்றவாளிகள் கடந்த சுதந்திர தினத்தில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இந்த விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு என்ற பெண்ணின் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவரது 3 வயது பெண் குழந்தை கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து இருந்த நிலையில் கடந்த சுதந்திர தினத்தில் 11 பேர் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் 11 பேர் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் பில்கிஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.