வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: புயலாக மாறுமா?

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (15:37 IST)
வங்கக்கடலில் டிசம்பர் 5ஆம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பதும், அது காற்றழுத்த தாழு மண்டலமாக மாறியது என்பதையும் அதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் அந்தமான் அருகே மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் டிசம்பர் 5-ஆம் தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்