தர்பூசணியில் ரசாயனம் கலப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கிளப்பிய புரளியால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் அளித்த புகாரில் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் தர்பூசணி சீசன் களைகட்டும் நிலையில், அதை முன்னிட்டு ஏராளமான விவசாயிகள் தர்பூசணியை பயிர் செய்து வளர்த்து வந்தனர். அறுவடை செய்து விற்பனைக்கு வர இருந்த நேரம், தர்பூசணி சிவப்பாக இருக்க ரசாயனம் கலக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் மக்கள் பீதியில் தர்பூசணி வாங்குவதை குறைத்ததால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்த நிலையில், தர்பூசணி வியாபாரம் பாதிக்கப்பட்டதற்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகளே காரணம் என்றும், இதற்கு தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடினர். இந்த விவகாரத்தில் தர்பூசணியில் ரசாயனம் கலக்கவில்லை என்பதை தோட்டக்கலை துறையும் உறுதிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட தர்பூசணி விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க பரிசீலிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Edit by Prasanth.K