சதுர்த்தி கொண்டாட அனுமதி. ஆண்மையுள்ள அரசு – ஹெச்.ராஜா டுவீட்

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (18:35 IST)
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், விநாயக சதுர்த்திக்கு எதிராக போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விநாயகர் சிலைகள் செய்யும் இடங்கள் சீல் வைக்கப்படுவது, விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல தடை போன்ற செயல்களை தமிழக அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.  @AmitShah எனப் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, அவர் மற்றோரு டுவீட்டில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இந்துக்களுக்கு போராட்ட காலமாகத் தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. எதையும் எதிர் கொள்வோம். எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது பதிவிட்டுள்ள டுவிட்டில், கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு எனப் பதிவிடுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்