ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், ஐநா சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என மதுரை ஆதீனம் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “காஷ்மீர் பெஹல்காம் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உலக நாடுகள் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், ஐநா சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “உலக நாடுகளில் நடைபெறும் எந்த விளையாட்டு போட்டியிலும் பாகிஸ்தானை பங்கேற்க அனுமதிக்க கூடாது. முக்கியமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான விளையாட்டுப் போட்டிகள் இனி நடக்கவே கூடாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.