என் விடுதலைக்கு போராடியவர்களுக்கு நன்றி! – விடுதலையான பேரறிவாளன்!

Webdunia
புதன், 18 மே 2022 (13:14 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான பேரறிவாளன் தனது விடுதலைக்காக போராடியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுவித்து இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து பலரும் பேரறிவாளன் விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலையான பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக நினைத்து எனக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கடந்த 31 ஆண்டுகாலமாக இடைவிடாது போராடிய தனது தாய்க்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

மேலும், தனது விடுதலைக்காக உயிர்விட்ட தங்கை செங்கொடியின் தியாகம்தான் தன்னை தொடர்ந்து விடுதலை நோக்கி உந்தியதாக தெரிவித்துள்ள அவர், தனக்காக வாதாடிய வழக்கறிஞர்கள், குரல் கொடுத்த மக்கள், மாநில அரசு மற்றும் பத்திரிக்கைகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்