பேரறிவாளன் விடுதலையை பாஜக ஏற்று கொள்கிறது: அண்ணாமலை

புதன், 18 மே 2022 (12:59 IST)
பேரறிவாளன் விடுதலையை பாஜக ஏற்றுக் கொள்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது என்றும், நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்! என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
அதேபோல் பாஜக பிரபலமும் நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பேரறிவாளனின் விடுதலைக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்