பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் தேறுவாரா? டஃப் கொடுக்கும் அருண் நேரு..!

Siva
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (15:02 IST)
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

மேலும் அவ்வப்போது பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளின் நிலவரத்தை பார்த்து வரும் நிலையில் தற்போது பெரம்பலூர் தொகுதி என்ன நிலைமை என்பதை பார்ப்போம்.

பெரம்பலூர் தொகுதியில் பாஜக சார்பில் பாரிவேந்தர், திமுக சார்பில் அருண் நேரு மற்றும் அதிமுக சார்பில் சந்திரமோகன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேன்மொழி போட்டியிடுகின்றனர்.

இதில் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாக இல்லை என்றும் திமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் இடையே தான் கடும் போட்டி நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

பாரிவேந்தருக்கு இந்த தொகுதியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது என்றும் கடந்த முறை திமுக அணியில் வெற்றி பெற்ற அவர் இந்த முறையும் வெற்றி பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் அருண் நேரு கடும் போட்டி கொடுப்பார் என்றும் அவரும் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்றும் அவருக்கு கூட்டணி கட்சியின் பலம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் இந்த தொகுதிகள் யார் ஜெயித்தாலும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்