3 நாள் தொடர்விடுமுறை.. ஓட்டு போடாமல் கொடைக்கானல் செல்லும் பொதுமக்கள்..!

Siva

செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (14:56 IST)
தேர்தல் நாளான வெள்ளிக்கிழமை பொது விடுமுறை என்றும் அதன் பிறகு சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை என்பதால் மூன்று நாட்கள் சுற்றுலா செல்வதற்கு பலர் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் நிறுவனங்கள் அரசு நிறுவனங்கள் உள்பட அனைத்து நிறுவனமும் தேர்தல் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு செலுத்துவதற்காக அரசு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா செல்ல பலர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் கொடைக்கானலில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் புக் ஆகி உள்ளதாகவும் சுற்றுலா செல்ல வருபவர்களின் எண்ணிக்கை இந்த மூன்று நாட்கள் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வாக்களிப்பதற்காக விடுமுறை அளித்தால் சுற்றுலா செல்கின்றார்களே என்று சமூக நல ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். பொதுவாக வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை தேர்தல் வாக்குப்பதிவு நாளாக வைத்தாலே இந்த பிரச்சனை ஏற்படும் என்றும் தேர்தலில் ஓட்டு போட்டு என்ன ஆகப்போகிறது சுற்றுலா சென்று வருவோம் என்று பலர் நினைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இந்த முறையும் குறைவான வாக்குகளே பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்