சீரியஸ்னெஸ் புரியாமல் திரியும் மக்கள்: அப்செட்டில் காவல்!!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (12:35 IST)
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,51,151 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இருப்பினும், மக்கள் நோய் தொற்றின் வீரியத்தை புரிந்துக்கொள்ளாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அப்படி ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 1,51,151 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்படுள்ளனர். இதுவரை 1,19,286 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ரூ.53,72,044 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 
 
காவல்துரையின வெயிலை பொருட்படுத்தாமல் இரவு பகல் என மக்களுக்காக கால் நெடுக்க சாலைகளில் பாதுகாப்புக்கு நிற்கும் நிலையில் இவ்வாறு மக்கள் பொருப்பின்றி இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்