தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா... 6 நாட்களில் நடந்தது என்ன??

சனி, 11 ஏப்ரல் 2020 (09:48 IST)
தமிழகத்தில் ஆறே நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,761 லிருந்து 7,447 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 206 லிருந்து 239 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 516 லிருந்து 643 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 911 பேரும், டெல்லியில் 903 பேரும், ராஜஸ்தானில் 553 பேரும், தெலுங்கானாவில் 473 பேரும், கேரளாவில் 364 பேரும், ஆந்திராவில் 363 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் தமிழகத்தில் ஆறே நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த புள்ளி விவரங்களுடன் கூடிய விரிவான பார்வை இதோ... 
 
கடந்த மார்ச் 29 ஆம் தேதி தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50-ஐ எட்டியது, மார்ச் 30 ஆம் தேதி 67 ஆக் அதிகரித்த எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் வேகமெடுத்தது. 
 
ஆம், மார்ச் 31 ஆம் தேதி 124, ஏப்ரல் 1 ஆம் தேதி 234, ஏப்ரல் 2 ஆம் தேதி 309, ஏப்ரல் 3 ஆம் தேதி 411, ஏப்ரல் 4 ஆம் தேதி 485, ஏப்ரல் 5 ஆம் தேதி 571, ஏப்ரல் 6 ஆம் தேதி 621, ஏப்ரல் 7 ஆம் தேதி 690, ஏப்ரல் 8 ஆம் தேதி 738, ஏப்ரல் 9 ஆம் தேதி 834 என தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 911 ஆக உள்ளது. 
 
இந்நிலை இப்படியே நீட்டித்தால் அரசு கடும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்